வாகை சூடவா, அழகர்சாமி குதிரை ஆகிய தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அழகர்சாமி குதிரையில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார். 59 வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சிறந்த துணை நடிகர் விருதை அழகர்சாமி குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டி பெறுகிறார். சிறந்த பொழுதுப்போக்கு படத்துக்கான விருதை அழகர்சாமி
குதிரை தட்டிச் சென்றுள்ளது. பிராந்திய மொழி படமாக தமிழில் வாகை சூடவா படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை 'ஆரண்ய காண்டம்' படம் பெற்றுள்ளது. ஆரண்ட காண்டம் படத் தொகுப்பாளர் பிரவீண் இந்த விருதை பெறுகிறார்.