கவர்ச்சியாய் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் நான் சொன்னதில்லை, எனக்கு அப்படியொரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், இளைஞன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். அடுத்து தமிழில், பீட்ஸா என்ற புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை புதுமுகம் கார்த்திக் சுப்பாராவ் இயக்குகிறார். பீட்ஸா கடையை மையப்படுத்தி இப்படத்தின் கதையை அமைத்து
இருக்கிறார் டைரக்டர். அட்டக்கத்தி தயாரிப்பாளர் திருக்குமரன் தயாரிக்க, தென்மேற்கு பருவக்காற்று விஜயசேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படம் குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், என்னுடைய நடிப்பை வெளிகாட்டும் படமாக இப்படம் இருக்கும். இப்படம் தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு நல்ல இடத்தை பெற்று தரும் என்று கூறியுள்ளார். மேலும் கவர்ச்சி தப்பில்லை என்றும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை, எனக்கு அப்படியொரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை, வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். ஆனால் நீச்சல் உடையில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.