அப்பு பப்பு திரை விமர்சனம்


குடும்ப பிரச்சினைகளால் மணவிவகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை, அவரது மகன் ஒன்று சேர்த்து வைக்கிறான். இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.  தனது கணவர் அப்பாஸிடமிருந்து பிரிந்து தனது மகனோடு தனியே வாழ்கிறார் ரேகா. அலுவலக வேலை காரணமாக தனது மகன் அப்புவுடன் கம்போடியா
நாட்டிற்கு செல்கிறார். அங்கே உள்ள ஹோட்டல் ஒன்றில் அப்பாஸ் மேனேஜராக பணிபுரிகிறார்.


இருவரிடையே அங்கும் மோதல் ஏற்படவே, பிரிந்து நிற்கும் அப்பாவையும் அம்மாவையும் ஒன்றிணைக்கும் வேலையில் அப்பு இறங்குகிறான். அவனுக்கு உதவியாக பப்பு எனும் உராங்உட்டான் குரங்கும் செயல்படுகிறது.


இவர்களது குறும்புக்கார சேட்டைத்தனங்களால் பிரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்தார்களா? இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கன்னடத்தில் வெளியான இப்படத்தை அப்படியே தமிழில் டப்செய்து கொடுத்திருக்கிறார், இப்படத்தின் இயக்குனரான ஆனந்தராஜு.


மனைவியை பிரிந்து வாழும் கணவன் வேடத்தில் வரும் அப்பாஸ் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். அப்பாஸின் மனைவியாக வரும் ரேகா, அப்பாஸ் உடன் விவாதம் செய்யும் காட்சிகளில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


அப்புவாக வரும் சிறுவன் ஸ்நேகித், பப்புவாக வரும் உராங்உட்டான் குரங்கும்தான் இப்படத்தின் கதாநாயகர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி நிச்சயம் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் ரசிக்கவைக்கும்.


சிரிப்புக்கு கியாரண்டி தரும் இப்படத்திற்கு கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஹம்சலேகாவின் இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கின்றன.


கணவன் மனைவி இருவரும் பிரிந்திருந்தால் பாதிக்கப்படும் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும், அதே குழந்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டால் பிரிந்த பெற்றோரின் நிலை என்னவாகும் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படத்தை நேர்த்தியாக இயக்கிய ஆனந்தராஜிற்கு சபாஷ் போடலாம்.


மொத்தத்தில் அப்பு பப்பு - குழந்தைகளுக்கேற்ற குதூகலமான படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget