5. ஒரு கல் ஒரு கண்ணாடி
ராஜேஷின் இந்தப் படம் ஏழு வாரங்கள் முடிவில் 16.71 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. எந்திரனுக்கு அடுத்த அதிக வசூல் இது. இதன் சென்றவார இறுதி வசூல் 4.4 லட்சங்கள்.
4. உருமி
சந்தோஷ் சிவனின் சாpத்திரப் படம் சென்ற வார இறுதியில் 6.6 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தின் நட்சத்திரப் பட்டாளம், பட்ஜெட், விளம்பரங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக்குறைவான வசூல். முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 35 லட்சங்கள்.
3. தடையறத்தாக்க
அருண் விஜய் நடித்திருக்கும் தடையறத்தாக்க சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 17.3 லட்சங்களை வசூலித்துள்ளது. அருண் விஜய்யின் மார்க்கெட்டுக்கு இது அதிகபடியான ஓபனிங்.
2. மனம் கொத்திப் பறவை
எழில் இயக்கியிருக்கும் இந்த மிகச்சுமாரான படம் ஹீரோ சிவ கார்த்திகேயன் என்பதாலோ தெரியவில்லை நல்ல ஓபனிங்கை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 37.6 லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.
1. கலகலப்பு
தொடர்ந்து அதே முதலிடத்தில் இருக்கிறது கலகலப்பு. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இதன் சென்னை வசூல் 5.19 கோடிகள். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 44.8 லட்சங்கள். இன்னும் சில வாரங்கள் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தாக்குப் பிடிக்கும் என்பது உறுதி.