பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும். சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும்
கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.
இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.