மீடியா முழுக்க அமலா பால் புராணம்தான் கடந்த நான்கு நாட்களாய். அம்மணி அமெரிக்கா போய் வந்தாராம்.
அந்தப் புராணத்தை தனக்கு தெரிந்த நாலு மீடியாக்காரர்களிடம் சொல்லி வைக்க, அவர்கள் கொஞ்சம் சுமாரான அமலா பாலுக்கு அசத்தலாக அலங்காரம் பண்ணி அம்சமான செய்தியாக உலாவ விட்டுவிட்டார்கள்...
அதுவும் எப்படி? 'முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற வெற்றிப் படங்களில் (??!!) நடித்த அமலா பால்' என்றுதான் அடைமொழியே கொடுத்திருந்தனர்!
செய்தியைப் படித்துவிட்டு
, அமலாபால் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்க்கும் கோடம்பாக்கவாசிகள், 'நண்பா தெரியுமா சேதி... அம்மணி அங்கே போய் விழாவில் சும்மா ஒப்புக்கு இரண்டு நாள் இருந்துவிட்டு, அடுத்து கமுக்கமாக ஒரு வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் அழகை எடுப்பாகக் காட்ட சிகிச்சை செய்தாராம்...", என்று கிசுகிசுக்கிறார்கள்.
ஆனால் அமலா பாலே, அமெரிக்காவில் புது மேக்கப், புது சிகை அலங்காரம் மட்டும்தான் பண்ணிக்கொண்டேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளார்.
எப்படியோ... இந்த சாக்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்றவற்றை பெரிய வெற்றிப் படமாக்கிவிட்டனர், அமலா பாலின் 'நிருப(அன்)பர்கள்'!