பில்லா 2 திரை விமர்சனம்


படத்த பத்தி இது வரைக்கும் வந்த போஸ்டர்கள், டிரைலர் மற்றும் லீக் ஆனா கதை எல்லாமே படத்த பத்தின ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அத படம் பூர்த்தி செஞ்சதாணு பாப்போம்.. முதல் ஸீன், டிரைலரில் பாத்த - என் வாழ்க்கையில
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா... அப்படியே அவரை பிடித்துக்கொண்டு இருக்கும் அத்தனை பேரையும் கத்தியால சதக் சதக்-னு குத்தியே கொள்ளும் போதே இது குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பார்க்க கூடாதுன்னு தெரிஞ்சு போச்சு.. இந்த முதல் கட்சியில ரசிகர்களின் விசில் சத்தம் காதை இழந்தது... அப்புறம் வெறும் அஜித்குமார் - பில்லா-2 ஆரம்பம்.
அப்பா அம்மா இல்லாத அனாதையாக அகதியாக தமிழ் நாட்டிற்கு வரும் அஜித்-க்கு ஒரு அக்கா சென்னையில் இருப்பதாக சொல்லி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். அங்க அதிக்காரியா அட்டகாசம் பன்னுரவரை பகைக்க அவர் அஜித்தை லாக்கப்பில் வைத்து அடி பின்னுகிறார். பின்பு சில வாரங்களுக்கு பிறகு அந்த அதிகாரியின் வஞ்சகத்தால் வைரம் கடத்தும் லாரியுடன் நண்பர் ரஞ்சித்துடன் சென்னைக்கு கிளம்புகிறார். வழியில் டூப்ளிகேட் போலிஸ் லாரியை மடக்கி இவர்களை கைது செய்வதுபோல் நடிக்க அதை கவனிக்கும் அஜித் அந்த போலிஸ் அத்தனைபேரையும் போட்டு தள்ளிவிட்டு அதில வைரம் இருக்கிறதுன்னு தெரிந்தும் அதை சரியான இடத்தில் கொண்டு போய் கொடுக்கிறார். பின்பு இந்த பிரைச்சனைக்கு காரணமான அந்த அதிகாரியை மதுர பொண்ணு எதிரே நின்னுனு வர்ற பாட்டு நடைபெறும் இடத்திற்கு சென்று போட்டு தள்ளுகிறார். பின்பு சென்று அக்காவையும் அக்கா மகளான ஹீரோயினையும் சந்திக்கிறார். அப்போது துப்பாக்கி வைத்திருக்கும் அஜித்தை பார்த்து அவரது அக்கா நீ இன்னம் திருந்தவே இல்லையானு கேட்டு கோவிக்கிறார். பின்பு வெளியில் சென்று படிப்படியாக கடத்தல் அப்படி இப்படியினு நாம ஏற்கனவே பாத்த பில்லாவா எப்படி மறுக்கிறார் என்பதுதான் கதை.


பில்லா இன்னைக்கு தமிழ்நாடே உச்சரிக்கிற ஒரு மந்திர சொல்... இப்படித்தான் ஆரம்பிக்கனுமுனு படம் பார்பதற்கு முன்னே நினைச்சிருந்தேன். ஆனால் படம் பார்த்த பின் இந்த படத்த பத்தி விமர்சனம் எழுதணுமா என்று தோணுது.. இப்ப (இத டைப் பண்ணும்) நேரம் இரவு மணி ஒன்னு.. இப்படி கஷ்டப்பட்டு எழுதனும்னு நினைக்கிற அளவுக்கு படத்தில ஒர்த் இல்ல.. அகதிகள் நம்ம நாட்டுக்குள் வர்ற காட்சியை எப்படி காட்டணும்னு ஒரு அடிப்படை அறிவு இல்லாமல் ஏதோ பிக்னிக் வர்றமாதிரி காட்டும் போதே இது தெளிவான படம் இல்லைன்னு தோனுச்சு... அத நிரூபிக்கிற மாதிரி ஒவ்வொரு காட்சியும் நம்மை ஏதாவது ஒன்னை யோசிக்க வைக்குது.. அடுத்த காட்சிலேயே கால் வளைந்த மாற்று திறனாளியான சிறுவனை அடிக்கிறார் இதுதான் அவர் டான் ஆவதற்கான முதல் படி என்று நினைக்கும் போதே எரிச்சல் ஆகுது.. என்ன ஒரு அருமையான தீம்.. அதை எப்படி சொல்லியிருக்கணும் (கிட்டத் தட்ட நாயகன் தீம்). படத்தோட முதல் பாதில சும்மா சும்மா நான் பண்ணுறேன் நான் பண்ணுறேன்னு மூக்க நுழைக்கிறார். அதில கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம பாதுகாப்பு படை துப்பாக்கியோட வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கும் போது இவர் மட்டும் ஒரேஒரு துப்பாக்கியால சுட்டுகிட்டே கடற்படை அதிகாரிகளிடம் இருந்து லாரிய கடத்தி வருகிறார் அதில கொஞ்சம் கூட புத்திசாலித்தனமா எதையுமே யோசிக்கலா... ஆனாலும் படத்தோட இரண்டாவது பகுதியில பிரமாண்டமா புத்திசாலித்தனமா ஏதாவது செய்வார்கள்னு பாத்தா படு சொதப்பல்.. கோவா முதல்வர், அமைச்சர், அமைச்சர் பையன்னு சம்பந்தமே இல்லாமல் கண்ணா பின்னான்னு போய் எப்படியோ பாரின்ல சீன் எடுக்கனும்னு போய் பிரமாண்டம்னு பேர்ல ஹெலிகாப்டர் பைட் ட்ரெயின்ல பாம்.. மூனே பேர் துப்பாக்கியால சுட்டே பெரிய வில்லன் பாத்துட்டு இருக்கும் போதே எல்லாத்தையும் கைப்பட்ருதல்னு சீரியஸ் இல்லாத திரைகதையில தேவையில்லாத பிரமாண்டம் காட்டி கடுப்படிக்கிறார்கள். சகுனியோட ரிலீஸ் பண்ணாதது நல்லதா போச்சு... அந்த அளவுக்கு மோசமான திரைகதை..
படத்தில இருக்கிற சில ப்ளஷ்ணு பாத்தா சில அதிரடியான மற்றும் பஞ்ச வசனங்கள் மட்டும் தான்.. நல்லவங்கள கண்டுபிடிகிரதுதான் கஷ்டம், இதுவரைக்கும் துரோகம் பண்ணுன எல்லோருமே கூட இருந்தவங்கதான், ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது, எனக்கு நண்பனா இருக்க தகுதி தேவை இல்லை ஆனால் எதிரியாய் இருக்க தகுதி வேணும், அத யாருமே ரெண்டாவது தடவை ரசிக்கல.. படத்தில முதல்ல வந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்னு வர்ற வசனம் செகண்ட் ஹாப்ல வரும் போது ஒருத்தரும் விசில் அடிக்கல. படம் முடிஞ்ச பிறகு ஒரு அமைதி தியேட்டர் முழுவதும் ஒரு 10 15 நொடிகளுக்கு இருந்தது அதுக்கு அர்த்தம் என்னனா எதுக்கு அஜித் அடுத்த படம் விஷ்ணுவர்த்தன் கூட எடுக்கிறார்.. இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்கள் நடிகர்கள் தங்கள் ஸ்கிரிப்டை சரி செய்ய கிடைத்த வாய்ப்புதான் இந்த பில்லா2 . அஜித் முகத்தை உர்ருன்னு வச்சிகிட்டு வர்ற ஆழ்வார் போன்ற படங்கள் சரியா ஓடல.. அவர் அப்படிபட்ட ஒரு கேரக்டரை மறுபடியும் செலக்ட் பண்ணும் போது ஸ்கிரிப்ட் ல கொஞ்சம் கவனம் செலுத்திருக்கனும்.. ஹீரோயின் மற்றும் வில்லன்கள பத்தி நெகடிவாத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது அதனால அதை தவிர்க்கிறேன்.. மதுர பொண்ணு பாட்டும் கலர்புல் மேக்கிங்கும் உண்மையிலேயே அட்டகாசம்.. மத்தபடி பின்னணி இசை எடிட்டிங் ரெண்டுமே ஒரு தெளிவில்லாத திரைக்கதைன்கிரதால எடுபடல.. ஒளிபதிவு குறிப்பா அந்த கிரேடிங் னு சொல்லபடுகிற விஷயம் கொஞ்சம் படத்தோட காட்சிகளை விரும்பி பார்க்க வைக்கிறது.. ஒருவேளை இந்த தெளிவில்லாத திரைக்கதைக்கு சென்சார் கட்டும் ஒரு சின்ன காரணமாக கூட இருக்கலாம்.. கிரேட் எஸ்கேப்.. சகுனியோடு ரிலீஸ் பண்ணாதது.


நன்றி - குவைத்சபா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget