புதன்கிழமையுடன் தி அமேசிங் ஸ்பைடர்மேன் உலக அளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படம் ஏற்கனவே வெளிவந்த ஸ்பைடர்மேனின் ரீபூட். அதாவது அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்கள். ஸ்பைடர்மேனாக ஆண்ட்ரூ கார்ஃபீல்டும், அவரது காதலியாக எம்மா ஸ்டோனும் நடித்துள்ளனர். ஸ்பைடர்மேன் சீரிஸுக்கு இவர்கள் புதியவர்கள். அதேபோல் இயக்குனர் மார்க் வெப்.
இவர் இதுவரை ஒரேயொரு படம்தான் இயக்கியிருக்கிறார். அதுவும் காதல் படம். 500 டேய்ஸ் ஆஃப் சம்மர். படம் ஹிட் என்றாலும் இது ஸ்பைடர்மேன் போல் ஆக்சன் படமல்ல. இத்தனை புதுமுகங்களுடன் ஒரு சோதனை முயற்சியாகதான் தி அமேசிங் ஸ்பைடர்மேன் திரைக்கு வந்தது. ஆனால் கலெக்சன் யாரும் எதிர்பார்க்காதது.
இந்தியாவில் அவதாரின் கலெக்சனே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அதனை முதல்நாளே இப்படம் முறியடித்தது. அதேபோல் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட்டான தி அவென்ஜர்ஸின் வசூலையும் இப்படம் தாண்டும் என்பது உறுதியாகியிருக்கிறது. சோனியை பொறுத்தவரை இது அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலான ஜாக்பாட். தி அமேசிங் ஸ்பைடர்மேன்