பேட்மேன் 3 ஹாலிவுட் விமர்சனம்


இன்றைய தேதியில் அதிக அகழ்வாராய்ச்சி, சாதா ஆராய்ச்சி, அசாதாரண ஆராய்ச்சி நடப்பது பேட்மேன் 3 படத்தைப் பற்றியே. கிறிஸ்டோபர் நோலன் அறியாத பல அதிசயங்களை இப்படத்திலிருந்து தோண்டியெடுத்து இணையத்தில் வா‌ரியிறைத்திருக்கிறார்கள் தமிழின் கிடா வெட்டி விமர்சகர்கள்.
இந்த விமர்சனங்களில் இருவகைகளை காணலாம். கலகலப்பு, ஒரு கல் ஒரு கண்ணாடியை ஆதர்ஷமாகக் கொண்டு இயங்குகிற ரசிகர்களின், விமர்சகர்களின், இயக்குனர்களின், ரசிக விமர்சகர்களின், ரசிக விமர்சன இயக்குனர்களின் விமர்சனங்கள். இரண்டாவது வகை கிறிஸ்டோபர் நோலன் பேட்மேன் என்று உச்ச‌ரிக்கும் முன்பே இணையத்தில் இரண்டாயிரம் பக்கம் தரவிறக்கி மனப்பாடம் செய்து படம் வெளியானதும் பேட்மேனின் ஜட்டி கலர் முதல் பிராய்ந்து புல்ல‌ரிக்கும் தரவிறக்கப் புலிகள்.


முதல் வகையினர் கமர்ஷியல் என்ற ஒற்றைச் சொல்லில் உயிர் வளர்த்தேன் கலை வளர்த்தேன் மரபினர். நாலு பாட்டு, அஞ்சு சண்டை, கொஞ்சம் காமெடி, தேவைக்கு கிளாமர். இது தமிழ் ஃபார்முலா. ஆங்கிலம் என்றால் அடிதடி, அடிதடி, மேலும் அடிதடி. கொஞ்சம் கிளாமரும், காமெடியும் இருந்தால் சொர்க்கம். இது தவிர்த்து திரைக்கதையில் அறிவின் அம்சம் தட்டுப்பட்டால் இவர்களுக்கு அலர்‌ஜியாகிவிடும். அந்தப் படம் ஓடினால் வாலில் தீப்பிடித்த வானரத்தின் கதைதான். கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் பிகின்ஸ் வந்த போது இவர்களில் பலருக்கு வாலில் தீப்பிடித்தது. ஸ்பைடர்மேன் மாதி‌ரி பறந்தோமா, வில்லனை வீழ்த்தினோமா, காதலில் மருகினோமா என்று இல்லாமல் உளவியல், உளப்பகுப்பாயியல்னு ஆஃபாயில் போடுகிறாரே என்று உள்ளுக்குள் மருகினாலும் வெளியே சொல்ல பயம். படம்தான் சூப்பர் ஹிட்டாச்சே. தி டார்க் நைட் வந்த போது மிச்ச வால்கிளிலும் தீப்பிடித்தது. அதை அணைக்க வாகாக மாட்டியது தி டார்க் நைட் ரைசஸ். 


படாவதி தியேட்ட‌ரில் படம் பார்த்துவிட்டு நோலன் என்னய்யா இந்த மாதி‌ரி படம் எடுத்திருக்கிறார். முட்டை போண்டான்னு கேன்டீன்ல விற்கிறான் பாரு.... முட்டையே இல்லாம என்று படத்தோடு தியேட்டர் போண்டாவையும் பத்து பாராவுக்கு விமர்சித்து அ‌ரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.


இரண்டாவது இன்னும் கொடூரம். காமிக்ஸில் உள்ள பேட்மேனின் ஜட்டி சைஸும் இந்த பேட்மேனின் சைஸும் ஒத்தே போகலை, நோலன் லேசா சறுக்கிட்டார் என்று இன்ச் டேப் விமர்சனம் வரை வந்திருக்கிறது. ஏ டூ இசட் தரவிறக்கி மனப்பாடம் செய்துவிட்டு, நாலாம்பு படிக்கிறப்போ அங்கிளின் லைப்ர‌ரியில் காணாப்பாடமா கட்கத்தில் இடுக்கினதாக்கும் என்று புல்ல‌ரிப்பு வேறு. 


சுருக்கமாக பேட்மேன் 3 விமர்சனம் எழுதாதவர்கள் தேசிய நீரோட்டத்தில் இல்லை என்றாகிவிட்டது. அந்த அவப்பெயர் நமக்கெதுக்கு. இதோ நம் பங்கிற்கு ஒன்று.


கிறிஸ்டோபர் நோலனின் படங்களில் காலம் பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். பர்சனாலிட்டி குறித்த குழப்பம் தேவைக்கேற்ப கையாளப்படும். இந்த குழப்பத்தில் உருவாகும் பிரகாசம்... உண்மை அல்லது உண்மைகள் அல்லது உண்மை போல தோற்றம் அளிப்பவை - ஆறு இரு கரைகளையும் இணைக்கிறது எனலாம். ஆறுதான் கரைகளை பி‌ரிக்கிறது என்றும் சொல்லலாம். கரைகளை உருவாக்குவதே ஆறுதான் என்றும் வைத்துக் கொள்ளலாம் - இதுவே அவ‌ரின் கலை வெளிப்படும் ஏ‌ரியா.


இன்சோமினியா அல்பசினோவின் தூக்கமின்மை, அதானால் ஏற்படும் குழறுபடிகள், மெமண்டோ ஷார்ட் டேர்ம் மெம‌ரி அதனால் உருவாகும் குழப்பம், பிரஸ்டீ‌ஜில் இரட்டையர்கள் ஒரே நபராக நடிப்பதால் காதலில் உருவாகும் பிரச்சனைகள்...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget