கணிணியில் நாம் ஒரு கோப்பையே பல இடங்களில் வைத்திருப்போம். ஒரு கோப்பை காப்பி செய்து தற்காலிகமாக வேறு இடத்தில் போடுவோம். பின்னர் அழித்து விடலாம் என இருந்து மறந்துவிடுவோம். இதனால் கணிணியில் வன்தட்டின் இடம் அதிகரிக்கும். நாம் எங்கெங்கெ ஒரே மாதிரியான கோப்புகளை வைத்திருக்கிறொம் என்று சுலபமாக கண்டறிய முடியாது. இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Duplicate commander. இந்த மென்பொருள் கணிணி முழுவதும் தேடி ஒரே மாதிரியாக
இருக்கும் கோப்புகளைப் பட்டியலிடுகிறது.
இதிலிருந்தும் அவற்றை நாம் அழித்துக் கொள்ளலாம். கோப்புகளைத் தேடும் போது இந்த மென்பொருள் கோப்புகளின் பெயரை வைத்து தேடுவதில்லை. மாறாக ஒரே மாதிரி பண்புகள் கொண்ட கோப்புகளாகத் தேடுகிறது. இதனால் ஒரே கோப்பு வேறு பெயர்களில் இருந்தாலும் அதனையும் கண்டுபிடித்து விடுகிறது. இதனால் நமக்கு வேலையும் எளிதாகிறது. இதன் முக்கிய அம்சமான தேடும் திறன் அருமையாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தேடச் சொன்னாலும் அந்த இடங்களில் இருக்கும் டூப்ளிகேட் கோப்புகளைக் கண்டறிந்து காட்டுகிறது. அதே போல கோப்புகளின் அளவைக் கொடுத்தும் தேடலாம். இந்த மென்பொருளிலேயே அந்த கோப்புகளை அழிக்கவும், காப்பி செய்யவும் முடியும்.
- இதன் File மெனுவில் சென்று Search for duplicates என்று கொடுத்து நமக்கு வேண்டிய போல்டர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் Search என்ற பட்டனைக் கிளிக் செய்தால் கோப்புகளைச் சோதிக்கத் தொடங்கும்.
- கணிணியின் வன் தட்டில் முழுதுமாகச் சோதித்து எந்தெந்த கோப்புகள் ஒரே மாதிரியாக உள்ளனவோ அவற்றினைப் பட்டியலிடும்.
- பின்னர் இதிலிருந்தே குறிப்பிட்ட கோப்புகளைத் திறந்து பார்க்கலாம். தேவையில்லை என்றால் அழித்து விடலாம்.
- மொத்தமாக கோப்புகளைத் தேர்வு செய்து அழிப்பதற்கு Edit மெனுவில் Perform a Task என்பதைக் கிளிக் செய்தால் கோப்புகளை மொத்தமாகத் தேர்வு செய்ய முடியும்.
- இந்த மென்பொருள் கணிணியில் தேவையில்லாமல் பல இடங்களில் ஒரே மாதிரியான கோப்புகளை அழிக்க சிறப்பான மென்பொருளாகும்
Size:607.5KB |