ஆசிரியர் தகுதித் தேர்வு முதழ் தாளுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன. போன வாரம் இரண்டாம் தாள் விடைகள் வெளியானது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காலையில் முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர். இந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி சென்னையிலுள்ள அசோக்நகர் பெண்கள்
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதழ் தாளுக்கான விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டுவிட்டதால், முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.