சஞ்சய்ராம் இயக்கத்தில் ரோசா என்ற பெயரில் உருவான படம் தற்போது குற்றாலம் என்ற பெயரில் குற்றாலத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. வாலி, சௌகந்தி, மீனு கார்த்திகா, சஞ்சய் ராம் ஆகியோர் காட்சியில் பங்கேற்றனர். குற்றாலம் பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உடம்பில் ஆடை ஏதுமின்றி மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்த சௌகந்தி, தனது புடவைகளில் ஒன்றை அந்த முதியவர் மீது போர்த்தி
அவரது மானத்தைக் காப்பாற்றினார்.
அதைப் பார்த்த இளைஞர்கள் சிலர் இது மாதிரி நாங்களும் இருந்தா டிரஸ் தருவியா என்று கேலி செய்து கலாட்டா செய்தார்கள். சஞ்சய்ராம், வாலி உள்பட படப்பிடிப்புக் குழுவினர் அவர்களை கண்டித்தபோது, அந்த வாலிபர்கள் மேலும் தகராறு செய்ய ஆரம்பித்தார்கள். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாலிபர்களை கண்டித்து வெளியேற்றினார்கள்.
போலீசார் மட்டும் வரவில்லை என்றால் முதியவரின் மானத்தைக் காப்பாற்றிய எனக்கே என் மானத்தைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என்கிறார் நடிகை.
நல்ல வேளையாக காப்பாற்றப் பட்டோம் என்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.