கதைக்கு தேவை என்றால் கவர்ச்சிக்கு ரெடி என கூறியுள்ளார் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான சுனேனா. மாசிலாமணி, வம்சம் போன்ற படங்களிலும் நடித்தவர். தற்போது கதிர்வேல், சமர், நீர் பறவை, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண்ணாகவும் நடித்து வந்தார். தற்போது, முதல்முறையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளியல் சீன்களிலும் ஆபாசமாக வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சிக்கு நான் ரெடி. ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் அமைந்துள்ளது. நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் ராசுமதுரவனுக்கு நன்றி. பாடல் காட்சியொன்றில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றார்.