இமேஜ் கோப்புகள் (Image files ) என அழைக்கப்படும் கோப்புகள் சிடி அல்லது டிவிடியிலிருந்து படமாக சேமிக்கப்பட்டு வைத்துக்கொள்ளப்படும். தேவைப்படும் போது அதனை அப்படியே சிடியில் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக .iso அல்லது .bin என்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டுகள், இயங்குதளங்கள், மற்ற மென்பொருள்கள் இவ்வாறாக ஆன்லைனில் தரவிறக்க அனுமதி தந்திருப்பார்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் நிறுவும் கோப்புகள்
(Linux Installation ) கூட இந்த வடிவத்தில் இருக்கும். ஆனால் சில இடங்களில் .bin வகை கோப்புகளை கொடுக்கும் போது நாம் அதை .iso வடிவில் மாற்றிக்கொள்ள விரும்புவோம்.
இந்த சிக்கலை சரிசெய்யத்தான் WinBin2Iso என்ற மென்பொருள் உள்ளது. இது எளிதான முறையில் பின் வடிவிலான சிடி இமேஜ்களை ஐஎஸ்ஓ வடிவில் மாற்றித்தருகிறது. கோப்புகளின் அளவு 2 ஜிபிக்கு மேல் சென்றாலும் மாற்றுகிறது. இதன் வேகமும் குறிப்பிடத்தக்கது.
இந்த மென்பொருள் இலவசமானது. இதை நிறுவத்தேவையில்லை. மென்பொருளின் மேல் கிளிக் செய்து பயன்படுத்தலாம். அதனால் பென் டிரைவில் வைத்துக்கூட பயன்படுத்தலாம். (Portable)
இது விண்டோஸின் அனைத்து இயங்குதளத்திலும் வேலை செய்யக்கூடியது.
Size:28.5KB |