நல்ல தானே போய்ட்டிருக்கு திரை முன்னோட்டம்


நல்லா தானே போய்ட்டு இருக்கு என்ற பெயரில் காமெடி படம் தயாராகிறது. இதில் நாயகனாக ஷரவன் அறிமுகமாகிறார். நாயகியாக அக்ஷரா நடிக்கிறார். எஸ்.வி.சேகர், சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா, பாலாசிங், இளவரசு, சிங்கமுத்து, கலைராணி ஆகியோரும் நடிக்கின்றனர். மலேசியா மன்னாரு முக்கிய கேரக்டரில் வருகிறது. இப்படத்தை அழக்கபன் சி டைரக்டு செய்கிறார். இவர் வண்ணத்து பூச்சி என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கியவர் படம் பற்றி அவர் சொல்கிறார். காதல், காமெடி படமாக இது தயாராகிறது. 

வித்யாசமான ஜாலி பேர்வழியாக நாயகன் வருகிறான். பணத்தை சேர்த்து வைப்பது அவனுக்கு பிடிக்காது. அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு நிம்மதியாக வாழ்கிறான். அவன் நடத்தைகள் நாயகிக்கு பிடித்து போய் காதல் வயப்படுகிறாள். இன்னொரு புறம் எப்படியாவது வாழ வேண்டும் என்ற முடிவெடுத்து செயல்படு நண்பர்கள் போன்றோரை மையப்படுத்தி இப்படம் தயாராகிறது. 

வெங்கட் என்ற என்.வெங் கடேசன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget