நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ மென்பொருள்கள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் மென்பொருள் போல வராது என்பது என் கருத்து. ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.
இந்த ஸ்கீரின்ஷாட் எடுக்கும் மென்பொருள் அளவு மிகச்சிறியது வெறும் 1400கேபி அளவுடையது இந்த மென்பொருள். இந்த மென்பொருளின் பெயர் Greenshot எனபதாகும். இந்த மென்பொருள் உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் மகத்துவம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:1.48MB |