சென்ற வாரம் வெளியான படங்களைவிட அதற்கு முன்பு வெளியான படங்களுக்குதான் வடக்கே மதிப்பு என்பது பாக்ஸ் ஆபிஸிலிருந்து தெரிகிறது. அய்யா, பூட் ரிட்டர்ன்ஸ், ஈகா-வின் இந்தி டப்பிங் என்று எல்லாமே அதிரடிதான். பட் பேஷண்ட் டெட் மாதிரி கலெக்சன் ரொம்ம்ம்ப கம்மி. பாக்ஸ் ஆபிஸில் இப்போது ஓ மை காட் தான் முதலிடம். மூன்றாவது வார இறுதியில் 8.5 கோடிகளை இப்படம் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. 17 தினங்களில் இதன்
வசூல் 68.5 கோடிகள். ம்... இப்போதைக்கு இதை அடிக்க முடியாது.
இரண்டாவது இடம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இரண்டாவது வார இறுதியில் இதன் வசூல் 8 கோடிகள். பத்து தினங்களில் 29 கோடிகள். மெதுவாக ஆரம்பித்தாலும் போகப் போக செம பிக்கப். நிச்சய வெற்றியில் இதுவும் சேர்ந்திருக்கிறது.
மூன்றாவது இடத்தில் அய்யா. வித்யாபாலன், பிருத்விராஜ் நடித்த இந்தப் படம் முதல் வார இறுதியில் அதாவது சென்ற வார இறுதியில் 4.5 முதல் 5 கோடி வரையே வசூலித்துள்ளது. ராம் கோபால் வர்மாவின் ஹாரர் பூட் ரிட்டர்ன்ஸ் இதைவிட மோசம். 3.5 முதல் 3.75 கோடிதான். இத்தனைக்கும் 3டி படம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலியின் ஈகா-வின் இந்தி டப்பிங் Makkhi 2.06 கோடியே வசூலித்துள்ளது. படம் நன்றாக இருப்பதாக பார்த்தவர்களின் பரவச வாக்குமூலம் வசூலை எகிற வைக்கும் என்று நம்புகிறார்கள்.