பேஸ் புக் இணையதளத்தில், மொபைல் மூலாமாக சேர்ந்தால் 50 ரூபாய் தருவதாக பேஸ் புக் இணையதளம் அறிவித்துள்ளது. இச்சலுகை இந்தியாவில் மட்டும் செல்லுபடியாகும் எனவும் அறிவித்ததுள்ளது. பயனர்களின் மொபைல் பயன்பாட்டினை அதிகரிக்க இவ்வாறு செய்துள்ளதாக பேஸ் புக் இணையதள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, பயனர்கள் m.facebook.com/tt என்ற இணைப்பிற்கு சென்று உங்களுடைய மொபைல்
என்னை பதிவு செய்யுங்கள். "பதிவு செய்யப்பட மூன்று நாட்களுக்குள் டாக் டைம் சேர்ந்துவிடும்" என பேஸ் புக் இணையதளம் அறிவித்துள்ளது.
தற்போது பேஸ் புக் இணையதளத்திணை சுமார் 50 மில்லியன் மக்கள் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர் இச்சலுகை மூலமாக மேலும் 30 சதவிகித பயனர்கள் அதிகரிப்பார்கள் என்று கூறியுள்ளனர். சமூக இணையதளம் ஒன்றில் இணைவதற்காக டாக் டைம் சலுகை இந்தியாவில் வழங்குவது இதுவே முதல் முறை.