டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர். இந்தியில் சக்கைப் போடு போட்ட படம். இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.
இந்த படத்தை தமிழிலும் தெலுங்கிலும் எடுக்க பல மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.
இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசினர். அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முன் வந்தார். தென்னிந்திய நடிகைகளில் இவ்வளவு தொகை நயன்தாராவுக்கு மட்டும்தான் பேசப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம்.
தனது இமேஜ் (அப்படீன்னு ஒண்ணு இருக்கோ!!) பாதிக்கப்படும் என்பதால், இந்தப் படத்தில் நடிக்க மறுக்கிறாராம் நயன்!!
ஆனால் இன்னும் சிலரே, இதெல்லாம் நயன்தாரா கிளப்பிவிடும் வதந்தி என்கின்றனர்.