தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரியா ஆனந்த், அதற்கு பின், சில விளம்பர படங்களிலும் நடித்தார். "சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இல்லையேஎன, ஏங்கிக் கொண்டிருந்த பிரியாவுக்கு, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், பிரியாவின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள், தங்களின் அடுத்த படங்களுக்கு அவரை "புக் செய்ய, ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது அவர், "புக்ரேஎன்ற இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஸ் சித்வானி,"இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில், பிரியாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்தை பார்த்த அடுத்த நிமிடமே, எங்களின் படத்துக்கு, அவரை புக் செய்து விட்டோம் என்கிறார்.