புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்தினை உங்கள் கணனியில் முந்தைய விண்டோஸ் பதிப்புக்களிலிருந்து Upgrade செய்து கொள்ள முடியும். விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு Upgrade செய்வதற்காக அப்பதிப்பினை பெறுவதற்க்கு முன்னர் Windows 8 Upgrade Assistant எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து அதனை உங்கள் கணனியில் இயக்கவும். இம்மென்பொருள் இயங்கி சிறிது நேரத்தில் உங்கள் கணனியானது
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை Upgrade செய்வதற்கு பொருத்தமான வன் பொருட்களை கொண்டுள்ளதா என தெரிவிக்கும்.
இந்த செயல் முறையில் சாதகமான பதில் கிடைத்தபின் விண்டோஸ் தளத்திற்கு சென்று விண்டோஸ் 8 பதிப்பினை பெறலாம் அல்லது குறித்த இயங்குதளத்தினைக் கொண்ட DVD காணப்படின் அதனை பயன்படுத்தவும். Upgrade செயல் முறையானது Windows 7 பதிப்பிலிருந்து மேற்கொள்ளப்படுமாயின் முன்பு காணப்பட்ட மென்பொருட்கள் மற்றும் கோப்புக்கள் பாதுகாப்பாக புதிய பதிப்பிற்கு இடம்மாற்றப்படும். அப்படியல்லாமல் ஏனைய பதிப்புக்களிலிருந்து Upgrade செய்தால் மென்பொருட்கள் அனைத்தும் புதிதாக நிறுவவேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.