சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யாவுக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வந்தாளே மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகியிருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 7சி தொடரில் நடித்தும் வருகிறார்.
நடிப்பு, தொகுப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வருங்காலத்தில் டைரக்ஷன் செய்யும் ஆசையும் இருக்கிறதாம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் கலையுலக பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிப்பு, தொகுப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வருங்காலத்தில் டைரக்ஷன் செய்யும் ஆசையும் இருக்கிறதாம்.