The Reader (2008) சினிமா விமர்சனம்

பொதுவாக Drama வகையிலான படங்கள் எனக்குப் பொருத்தமானவையல்ல — அவற்குக்கு கவனம் கொடுத்து பார்த்து முடிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஸ்டமான விடயம். அப்படியான என்னையும் சிந்தை சிதறாது இரண்டு மணித்தியாலம் கட்டிவைத்திருந்தது இந்தப் படம்! ஐந்து ஆஸ்காரிற்கு தெரிவாகி, அவற்றில் ஒன்றைத் தட்டிக் கொண்டு போன படம்; அது ஏன் என்பது படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகின்றது.

1958′ஆம் ஆண்டு ஜேர்மனி — இரண்டாம் உலகயுத்ததை முடித்துக் கொண்டு அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. இங்கே 36 வயதான Hanna’வுக்கும் (Kate Winslet), 15 வயதான Michael’க்கும் (David Kross) இடையில் ஆரம்பிக்கும் காதலைச் சித்தரிக்கின்றது படத்தின் முன்பகுதி. Hanna ஒரு பேரூந்து நடத்துணர் (ticket conductor). இவர் கிட்டதட்ட பாடசாலைப் பையனான Michael’ஐ வழைத்துப் போடுகின்றார் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் உடலுறவு சம்பந்தப் பட்டது என்றாலும், அதில் இன்னுமொரு பெரும்பங்கு, Hanna’வின் வற்புறுத்தலில் பேரில், Michael அவளிற்கு புத்தகம் வாசித்து கதை சொல்வதில் போகினறது. மூக்குவரையில் காதலில் மூழ்கி இருக்கும் Michael, Hanna என்னசொன்னாலும் அதற்கு இணங்கிப் போகின்றான். இவர்களின் கள்ளத்தனமான் இந்த உறவு இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, Hanna’வுக்கு ஒரு அலுவலக வேலைக்கான பதவியுயர்வு வருகினறது. அத்துடன் திடீரென தலை மறைவாகிவிடுகின்றாள் Hanna!

மிகவும் மனமுடைந்து போகும் Michael கொஞ்சம், கொஞ்சமாக தெளிந்து பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்றான். அங்கு வக்கீல் துறையில் படிப்பைத் தொடர்கின்றான். இவனது பல்கலைக் கழக படிப்பின் ஒரு பகுதியாக ஒரு நீதிமன்ற வழக்கை பார்வையிடவேண்டி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை அடைத்து வைத்திருந்து படுகொலை செய்வதற்கு பெயர் பெற்ற ஒரு சிறைச்சாலை காவலாளிகள் மீது, அங்கிருந்து தப்பிய ஒரு பெண் போடும் வழக்கு. வழக்கைப் பார்வையிட செல்லும் Michael’ற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது — அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆறு பேரில் ஒருத்தி Hanna! மிகுதிக் கதையை நான் இங்கு சொல்லக் கூடாது.

படத்தின் கதையோட்டம் மிகவும் அழகு; காதலில் மர்மம், மர்மத்தில் ஆச்சர்யம், இன்பத்தில் சோகம், சோசகத்தில் சுகம் என்று நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்கள் ஆளிற்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றார்கள். Kate Winslet இந்தப் படத்திற்காக ஆஸ்காரைத் தட்டிக்கொண்டது தகும் என்றாலும், அவரது முதிர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்றார்கள் மற்றைய அனைவரும். இளம் நடிகர் David Kross’உம் அபாரம். வயதுக்கு வந்த Michael ஆக வரும் Ralph Fiennes (எங்கட Harry Potter Voldemort) நெஞ்சத்தில் சுமையைக் கட்டிக்கொண்டு அவதிப்படும் பாத்திரத்தில் சிக்கென்று பொருந்துகின்றார். கொஞ்ச நேரத்திற்கு வந்து போகும் Lena Olin கூட பல்லாண்டு காலமாக மனதில் இருக்கும் வஞ்சத்தை விக்ஷமாகக் கொட்டும் வேளையில் செஞ்சை அள்ளிச் செல்கின்றார். படத்தில் கதை வசனங்கள் கூட அந்தமாதிரி! முக்கியமாக நீதி மன்றத்தில் Hanna அளிக்கும் பதில்களிலும், படத்தின் கடைசிக் கட்டத்தில் அந்த யூதமுகாமிலிருந்து தப்பிவந்த பெண்ணோடு Michael உரையாடும் காட்சியிலும். கூடவே நெறியாள்கை, ஒளியமைப்பு எல்லாவற்றிலும் சிறந்து நிற்கின்றது படம். படத்தின் முன் 30% பாகத்தில் Kate Winslet ஆடைகளுடன் இருப்பதை விட, இல்லாது இருப்பதுதான் அதிக நேரம். அது கூட விகாரமாக இல்லாது படத்துடன் இயல்பாக கலந்து விடுகின்றது.

தயாரிப்பாளர்கள் விடும் ஒரே பிழை, பட விளம்பரங்களில் படத்தை கிட்டத்தட்ட ஒரு மர்மப் படம் போன்று சித்தரித்திருப்பது. படத்தில் மர்மம் உண்டு என்றாலும், அது அங்கே படத்தின் அரைவாசியுடன் நின்றுவிடுகின்றது. படம் அடிப்படையில் ஒரு காதல் படம். தவிர, படத்தில் வரும் Michael’இன் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, “குற்றவாளி” எனப்படுபவன் யார் என்பதை ஒரு ஆழமான கண்ணோட்டத்தோடு பார்க்க முனைவது படத்தின் மறைமுகமான நோக்கம். ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget