கன்னடத்தில் கரை சேரும் களவாணி நாயகி

களவாணி படத்தில், விமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஓவியா. படம் வெற்றி பெற்றபோதும், ஓவியாவுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. கமல் நடித்த, "மன்மதன் அம்பு படத்தில், ஒரு சிறிய வேடத்தில் தலை காட்டினார். "மெரினா, கலகலப்பு போன்ற சில படங்களில் நடித்தபோதும், தன் நடிப்பை ஓகோவென பாராட்டும் அளவுக்கு, வாய்ப்புகள் கிடைக்காததில், அவருக்கு சற்று ஏமாற்றமே.தற்போது," சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட, ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தும், கோடம்பாக்கத்தின் முன்னணி நடிகையாக மாறுவதற்கு, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதால், கன்னடம் பக்கம் போகலாமா என, யோசித்து வருகிறாராம்.கன்னட திரையுலகம் கை கொடுத்தால், அங்கே ஒரு கலக்கு கலக்கி விட்டு, அடுத்தபடியாக, கோடம்பாக்க கோட்டையை, மீண்டும் முற்றுகையிடுவது என்ற, முடிவுடன் இருக்கிறாராம், ஓவியா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget