தை திருநாள் - சுவையாக பொங்கல் செய்வது எப்படி!

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும்
பெரிய குதூகலத்தை ஏற்படுத்தும். 
மேலும் பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். பொங்கலின் மற்றொரு சிறப்பான கரும்பிற்காகவே பொங்கல் பண்டிகைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த பண்டிகையின் போது கரும்பு மிகவும் விலை குறைவில் கிடைக்கும். அத்தகைய சிறப்புடன் இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலை சிலருக்கு சரியான சுவையில் வைக்கத் தெரியாது. அத்தகையவர்களுக்கு அந்த சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சர்க்கரைப் பொங்கலை வைத்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழுங்கள். மற்றும் பல வகையான பொங்கல் வகைகளையும் செய்வதற்கான செய்முறையையும் தெளிவாக கொடுத்துள்ளோம்


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget