கண்ணா லட்டு தின்ன ஆசையா சினிமா விமர்சனம்

1981 வருடம் வெளி வந்த "இன்று போய் நாளை வா" படத்தின் கதை தான். "இன்று போய் நாளை வா" பிடிக்காது என்று தமிழகத்தில் யாரும் சொல்லி இது வரை நான் கேட்டது இல்லை. கே .டிவியில் இந்த படத்தை எப்பொழுது போட்டாலும் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். அட்டகாசமான திரைகதையை கொண்ட படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை முன்று கதாநாயகர்கள்
லவ்வுவதை செம நகைச்சுவையாக சொல்லி இருப்பார் பாக்யராஜ். இன்று போய் நாளை வா படத்தை சிறு சிறு மாறுதல்கள் உடன் மறுபதிப்பு செய்து சந்தானம், ராக்கிங் பவர் ஸ்டார், சேது மற்றும் விஷாகாவை கொண்டு வழங்கி உள்ளார் இயக்குனர் மணிகண்டன். 

வேலை வெட்டி எதுவும் இல்லாத வழக்கமான தமிழ் ஹீரோ கதாபாத்திரம் சிவா (சேது). இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் புதுசாய் குடி வரும் சௌமியாவை (விஷாகா ) பார்த்தவுடன் காதல் கொள்கிறார்கள் சேதுவின் நண்பர்கள் கால்கட்டு கலியபெருமாள் என்கிற கே.கே (சந்தானம்) மற்றும் பவர் குமார் (பவர் ஸ்டார்). முன்று பேரும் எப்படியாவது சௌமியா மனதில் இடம் பிடிக்க போட்டி போடுகிறாக்கள். இறுதியில் யார் போட்டியில் வெற்றி பெற்றார் என்கிற கேள்விக்கான விடையை பயங்கர நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.



முன்று கதாநாயர்களின் அறிமுகம் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிகிறது. அதில் செமையாய் ஸ்கோர் செய்வது பவர் தான். மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் விசில் சத்தம் பவருக்கு கிடைத்தது. நானும் இவரை முதல் முறை பெரிய திரையில் பார்கிறேன். மனிதர் பின்னி பெடல் எடுத்து உள்ளார். டான்ஸ் கற்று கொள்வது, சௌமியாவிடம் ப்ரோபஸ் செய்வது, ஹீரோயினை இம்ப்ரெஸ் செய்ய இவர் செய்யும் செண்டிமெண்ட் டிராமா, கிளைமாக்ஸ் டெர்ரர் பைட் என்று பவர் செய்யும் அனைத்து அலப்பறைகளும் சிரிப்பு சர வெடிகள் தான். இவரை மிக சரியாக உபயோக படுத்தி உள்ளார் இயக்குனர். ஆனால் முக எக்ஸ்பரஷன் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. போக போக அடுத்த படத்தில் இருந்து பிக் அப் செய்து விடுவார் என்று நம்புவோம் ஆக.

அடுத்து சந்தானம், உண்மையில் இவர் காமெடி சூப்பர் ஸ்டார் தான். இயக்குனர் "ராஜேஷ்" காம்பினேஷனில் தான் இவரிடம் இருந்து இப்படி பட்ட காமெடி ட்ரீட்டை பார்த்து உள்ளேன். படத்தில் தேர்ந்த நடிகர் என்பது இவர் மட்டும் தான், அதனால் நிறைய இடங்களில் இவர் தான் படத்தை தாங்கி செல்கிறார். குபீர் சிரிப்பை வரவைக்கும் நிறைய கௌண்டர் அட்டாக்ஸ் காமெடியை படம் நெடுக்க தூவி உள்ளார். அட்டகாசம். தன் படம் என்பதால் மனிதர் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிகிறது. இவர் சௌமியாவிடம் ப்ரோபஸ் காட்சியில் கை தட்டல் குறைய நிறைய நேரம் ஆனது. 

சேது என்கிற புது முக நடிகர் நடித்து உள்ளார். ஹீரோயின் விவேல் விளம்பரத்தில் நடித்தவர், "டல் திவ்யாவாக, இப்ப தூள் திவ்யா ஆகிடா". பாட்டு வாத்தியாராக VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் ஆக "வரலாறு படத்தில் அஜித்துக்கு டான்ஸ் சொல்லி குடுத்தவர், கோவை சரளா, பட்டிமன்ற ராஜா என்று நிறைய நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

பாடல்கள் எல்லாமே படத்தில் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் வருகிறது. பின்னணி இசை தேவையான அளவுக்கு வழங்கி உள்ளார் "தமன்". மொத்தத்தில் ஒரு காட்சியில் கூட நகைச்சுவை குறையாமல், லாஜிக் பற்றி அதிகம் யோசிக்க விடாமல்,  பெரிய குறை எதுவும் சொல்ல முடியாத படி திருப்தியான படத்தை வழங்கிய சந்தானம் மற்றும் பட குழுவினருக்கு என் நன்றிகள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget