கவர்ச்சி பொம்மையாக, தமிழில் என்ட்ரியான ஹன்சிகாவுக்கு "ஒரு கல் ஒருகண்ணாடி படம் மாற்றுப் பாதைக்கு வழிவகுத்தது. குறிப்பாக, காமெடி கலந்தகதைகளுக்கு அவரை புக் செய்தனர். அந்தவரிசையில், "சிங்கம் 2 படத்தில் காமெடியானகதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அடுத்தபடியாக சுந்தர்.சி. இயக்கி வரும் "தீயாவேலை செய்யனும் குமாருஎன்ற படத்திலும் காமெடி நாயகியாகத் தான் நடிக்கிறார்.
"இதுவரை நடித்ததில், இந்த படத்தில் தான் என்னையுமறியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்லும் ஹன்சிகா, "இனிமேல் இதுமாதிரி நானும் சிரித்து, ரசிகர்களையும் சிரிக்க வைப்பது போன்ற கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து நடிப்பேன். இனி, என் நடிப்பு, வித்தியாசமானபாதையில் பயணிக்கும் என்றும் புதிர் போடுகிறார்.