இன்றைய காலத்தில் மேக்-கப் போடாத பெண்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. ஏனெனில் பெண்கள் அவ்வாறு இருப்பது தற்போது மிகவும் குறைவு. அவ்வாறு செய்யும் மேக்-கப்பில் மறக்காமல் அதிகம் பயன்படுத்துவது என்றால் அது லிப்ஸ்டிக் தான். பொதுவாக உதட்டிற்கு எப்போதும் லிப்ஸ்டிக் போட்டால், அதில் உள்ள கெமிக்கல்களே உதட்டின் இயற்கை அழகைக் கெடுத்துவிடும். எனவே இத்தகைய கெமிக்கல் அதிகம் உள்ள லிப்ஸ்டிக்கை
அதிகம் பயன்படுத்துவதை விட, உதட்டிற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. சில பெண்களுக்கு எப்போது பார்த்தாலும், உதடு வறட்சியடையும், அத்தகைய பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்துவதை தவிர்த்து, அதனை தடுக்கும் மற்ற அழகுப் பொருட்களை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். இப்போது லிப்ஸ்டிக்கிற்கு பதிலாக வேறு எந்த அழகுப் பொருட்களை உதட்டிற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
லிப் க்ளாஸ்: லிப்ஸ்டிக்கிற்கு பதிலாக பயன்படுத்தும் ஒரு அழகுப் பொருள் தான் லிப் க்ளாஸ். இதனை உதட்டிற்கு போட்டால், உதடுகள் மின்னுவதோடு, வறட்சியடையாமல் இருக்கும். அதிலும் லிப் க்ளாஸில் நிறைய ப்ளேவர்கள் உள்ளன.
லிப் பாம்: லிப் பாம், லிப் க்ளாஸ் போன்றதல்ல. இதன் பெயரை வைத்தே, இது வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் என்பதை நன்கு அறியலாம். மேலும் இது உதட்டை பொலிவோடு வைக்குமே தவிர, லிப் க்ளாஸ் போன்று பொலிவோடு இருக்காது. அதிலும் இது லிப்ஸ்டிக்கை விட மிகவும் ஆரோக்கியமானது. இதிலும் நிறைய ப்ளேவர்கள் உள்ளன.
பெட்ரோலியம் ஜெல்லி: பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லி குளிர்காலத்தில் தான் பயன்படுத்துவார்கள். இதனை உடல் முழுவதும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டிற்கு பயன்படுத்தினால், அது லிப் பாம் போன்றே வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.
வீட்டு லிப்ஸ்டிக்: லிப்ஸ்டிக் போடாமல், உதட்டிற்கு இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, சிவப்பு நிறம் வேண்டுமெனில் அதற்கு லிப் பாம்மில் சிறிது குங்குமத்தை சேர்த்து கலந்து, உதட்டிற்கு தடவினால், உதடு நன்கு சிவப்பாக காணப்படும்.
ஆலிவ் ஆயில்: உதட்டிற்கு நிறத்தை பெற எந்த ஒரு செயற்கைப் பொருளும் பயன்படுத்த பிடிக்கவில்லையெனில், இயற்கை முறையை பின்பற்றுங்கள். அதற்கு ஆலிவ் ஆயிலை உதட்டிற்கு தடவ வேண்டும். இவ்வாறு செய்தால், உதடு வறட்சியடையாமல் இருப்பதோடு, மின்னவும் செய்யும்.
மேற்கூறியவையே லிப்ஸ்டிக்கிற்கு பதிலாக உதட்டிற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள். வேறு ஏதாவது யோசனை உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.