சலிப்படைந்துபோன வேலை, மனைவி வழி மாமனாரின் கையில் மாட்டிப்போன சொத்துக்கள், கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவி, உப்பிக்கொண்டுபோகும் வயிறு, படிய மறுக்கும் தலைமயிர் என்று வாழ்க்கையில் முற்றுமுழுதாக சலிப்படைந்து இருக்கும் Bill (Aaron Eckhart), மாமனாரின் கட்டாயத்தில் தனது பழைய பாடசாலையில் மாணவன் ஒருவனிற்கு mentor (வழி நடைப்படுத்துபவர்) ஆக இருக்க சம்மந்திக்கிறார்.
இந்த மாணவனுடனான இவரது தொடர்பு எவ்வாறு அவரது சொந்த வாழ்க்கையை பாதிக்கின்றாது என்பது கதை.
இப்படியான கதையோடு முன்பு வந்த படங்களைப்போல இந்தப்படமும் கதையை நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறது. என்றாலும் படத்தில் நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்கின்ற மாதிரியோ, பெரிதாக புத்திசாலித்தனமாகவோ இல்லை. Bill’இன் மனைவிக்கு வரும் Elizabeth Banks சிக்கென்று இருக்கிறார்; கூடவே உதிரி அழகிற்கு Jessica Alba. நடிப்பென்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. படம் அலுப்பில்லை, என்றாலும் பெரிதாக ஆர்வம் ஊட்டுவதாகவும் இல்லை. படத்தை முடிவில்லாமல் முடித்திருப்பது, தமிழ்பட ரசிகர்கள் பெரும்பகுதியினரிற்குப் பிடிக்காது. ஆடைக்குறைப்புகள், வயதுக்குவந்தவர்களிற்கான நகைச்சுவைகள் இருப்பதால் படம் குடுபத்தோடு பார்ப்பது அவ்வளவு ஏற்றதல்ல.