காதல் படத்தில் நாயகியாக நடித்தவர் சந்தியா. கேரளத்து நடிகையான இவர் அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தபோதும், அவரால் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போது தாய்மொழியான மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் சந்தியா. அங்கு முதன்மை நாயகி வேடம் இல்லை என்றாலும், திறமைக்கு சவால் விடக்கூடிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சந்தியாவும் தற்போது அங்கு பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் அவர் நடித்த சில படங்கள் தற்போது தமிழில் டப்பாகி வருகிறது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தமிழில் சில படங்களை கைப்பற்றலாம் என்று சென்னை வந்த சந்தியா, ஏற்கனவே பரிட்சயமான ஒரு இயக்குனரை அணுகி சான்ஸ் கேட்டிருக்கிறார். ஆனால் முன்பைவிட தற்போது ஊதி பெருத்திருந்த சந்தியாவைப்பார்த்த அவர், இப்போது கதாநாயகி வேடமெல்லாம் தர முடியாது.ஆனால் ஒரு வித்தியாசமான ஆண்ட்டி வேடம் உள்ளது. கதைப்படி அதுதான் வலுவான வேடம். வேண்டுமானால் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்து விட்டாராம் சந்தியா. சின்னப்பொண்ணு நான். என்னைப்போய் ஆண்ட்டி வேடத்தில் நடிக்கச்சொல்கிறீர்களே. உங்களுக்கே நியாயமா இருக்கா என்று உருக்கமாக அவரிடம் கேள்வி கேட்ட சந்தியா, இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் சென்னைப்பக்கமே வந்திருக்க மாட்டேன். வந்ததுக்கு, இனிமேல் இந்த பக்கம் தலைவைத்தே படுக்காதே என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் என்று புலம்பிக்கொண்டே ஓட்டம் பிடித்து விட்டாராம் நடிகை.