மல்லிகா ஷெராவத், இம்ரான் ஹாஷ்மி நடித்த ‘மர்டர்’ என்ற படம் 2004ல் திரைக்கு வந்தது. மகேஷ்பட்டின் கதைக்கு திரைக்கதை அமைத்து அனுராக் பாசு இயக்கினார். 2011ல் ‘மர்டர் 2’ வந்தது. இதில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜாக்லின் பெர்னாண்டஸ் நடித்திருக்கிறார். மோகித்தரி இயக்கி இருந்தார்.
தற்போது ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து ‘மர்டர் 3’ தயாரிக்கிறார் மகேஷ்பட். தொடர்ந்து 2 பாகங்களில் ஹீரோவாக நடித்த இம்ரான் ஹாஷ்மிக்கு
பதில் ரன்தீப் ஹுடா நடிக்கிறார். அதிதிராவ், சாரா லோரன் ஹீரோயின். விசேஷ்பட் இயக்கம்.
பிரபல போட்டோகிராபரான ஹீரோ நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் பெண்ணை காதலிக்கிறான். நகரத்துக்கு வெளியே இருக்கும் அழகிய பங்களாவுக்கு சென்று தங்குகின்றனர். ஜாலியாக நாட்களை கழிக்கின்றனர். அப்போது எதிர்பாராத அதிர்ச்சி சூழ்கிறது. அங்கு கிடைக்கும் சில ஆதாரங்கள் காதலியை நிலைகுலைய வைக்கிறது. தன்னை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்கிறாள். இதன் முடிவு என்ன என்பது கதை. இம்மாதம் திரைக்கு வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது