ஏர்செல் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் விசா ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து மொபைல் பேங்கிங் சேவைகளை துவங்கவுள்ளன.இந்த புதிய சேவைகளின் மூலமாக உங்கள் மொபைலிலிருந்தே பணத்தை டெபொசிட், எடுப்பது மற்றும் மற்றவருக்கு அனுப்புவது ஆகியவற்றை எளிதில் செய்யலாம்.
முதலில் இந்த சேவையானது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுமென கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏர்செல்லின் வணிகப்பிரதிநிதி திரு.நாராயணன் கூறுகையில், "ஐசிஐசிஐ பேங்குடன் இணைந்து இந்த சேவையை வழங்கவுள்ளோம். ஏர்செல் பயனாளர்களுக்கு தனித்தனி ஐசிஐசிஐ கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களது தகவல்கள் பாதுகாக்கப்படும். செல்போன் தொலைந்தாலும் பணத்தை திரும்பப்பெறலாம்." என்றார்.
காதலர் தின ஸ்பெஷல்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த சேவையானது தொடங்கப்படுவதே, இன்டர்நெட் இணைப்பிலாமலே வேகமாக பண பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்." என்றார்.
ஏர்செல் நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 24 லட்சம் பயனாளர்களும், நாடு முழுவதிலும் 6.5 கோடி பயனாளர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.