The Other Man ஹாலிவுட் சினிமா விமர்சனம்

மணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை. ஒரு நாள் தன் மனைவியின்
செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.

திரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.

Liam Neeson இந்த திரைப்படத்தில் கணவன் பாத்திரத்தில் நடிக்கின்றார். முன்னாள் கள்ளக் காதலன் பாத்திரத்தில் Antonio Banderas நடிக்கின்றார். Liam Neeson நல்ல ஒரு நடிகர்தான் இவரை நீங்கள் Taken, Batman Begins போன்ற திரைப்படங்களில் பாத்திருக்கலாம்.

Antonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.

வழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோருக்கான திரைப்படம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget