3டி' யில் படமாகும் தமிழர்களின் வீர விளையாட்டு


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சினிமா படமாகிறது. இப்படத்தை வெங்கடேசன் இயக்குகிறார். இவர் காந்தியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ‘மன்னிப்பு’ என்ற பெயரில் குறும்படமாக   எடுத்தவர். ஜெமினி கணேசனை பற்றி காதல் மன்னன் என்ற பெயரிலும், ஆவண படம் எடுத்துள்ளார். 

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டை இணையதளத்துக்காக சர்வதேச நேயர்களுக்கு படம் பிடித்துள்ளார். ஜல்லிக்கட்டை சினிமா படமாக எடுப்பது பற்றி வெங்கடேசன் எம். கூறும்போது, 

திட்டமிடப்பட்ட பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்ட ஜல்லிக்கட்டில் ஆபத்துக்கு வாய்ப்பு இல்லை. அசம்பாவிதமாக நடப்பது விதிவிலக்கு. கிரிக்கெட் ஓட்டப் பந்தயங்களில் கூட அடிபடுகிறது. ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்க்கை, மாடு வளர்க்கும் முறை, விளையாட்டு நடக்கும் ஊர்கள், மக்கள் மனநிலை போன்ற யதார்த்தங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போல்  சுவாரஸ்யமாக இப்படத்தின் திரைக்கதை இருக்கும். 

ஜல்லிக்கட்டு பற்றிய பல உண்மைகளை இப்படம் உலகுக்கு காட்டும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget