பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் நிலைத்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய Shortcut key களை இங்கு காணலாம். Shortcut key களைப் பயன்படுத்தும் முன், முதல் Key ஆன Modifier Key; அதாவது Keyboard இன் செயல்பாட்டினை மாற்றித் தரும் Key. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். 

விண்டோஸ் இயக்கத்தில் Firefox பிரவுசருக்கு Alt+Shift, ஆகவும் Google Crome மற்றும் Internet Explorer பிரவுசருக்கு Alt ஆகவும் கொள்ளப்படுகிறது. இந்த Key களுடன், கீழே தரப்படும் Key களை இணைத்துப் பயன்படுத்தலாம். 

1. புதிய மெசேஜ் பெற -M 
2. பேஸ்புக் சேர்ச் -? 
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- 1 
4. உங்கள் புரபைல் பேஜ் 2 
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் - 3 
6. மெசேஜ் மொத்தம் -4 
7. நோட்டிபிகேஷன்ஸ் 5 
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6 
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் - 7 
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8 
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் -9 
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் -O

இறுதியில் தரப்பட்டுள்ள Keyகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த Modifier Key உடன் பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக, Firefox பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும். 

இந்த Shortcut key களில் உள்ள எண்களை, Num lock செய்து Keyboard இலிருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான Key களையே பயன்படுத்த வேண்டும்.