பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்


சிங்கம் இந்தி ‌ரீமேக்கில் நடித்த காஜல் அகர்வால் அதன் பிறகு அக்சய் ஜோடியாக ஸ்பெஷல் 26 படத்தில் தோன்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்த பிரேக் இந்தியில் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தென்னகத்துக்கே திரும்பியிருக்கிறார். கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்து வருகிறவர் மேலும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தெலுங்கில் சம்பத் நந்தி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் காஜலுக்கு ஜோடியாக நடிப்பவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

மகேஷ்பாபுடன் பிசினஸ்மேன், விஜய்யுடன் துப்பாக்கி, ராம்சரண் தேஜாவுடன் நாயக், அக்சய் குமாருடன் ஸ்பெஷல் 26 என காஜலின் சமீபத்திய படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். அதன் காரணமாக ஒரு கோடிக்கு சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். 

அதைத் தர தயா‌ரிப்பாளர்கள் தரப்பில் போட்டா போட்டி போடுவதுதான் காஜலின் பலம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget