கட்டம் கட்டும் அ‌‌ஜீத் பட டீஸர்

ஏப்ரல் 30 நள்ளிரவில் வெளியிட்டார்கள் வெறும் 42 விநாடிகள்தான். கடந்த நிமிடம்வரை பல லட்சம் பேர் இந்த டீஸரை பார்த்து பரவசமடை‌ந்திருக்கிறார்கள். தகவல் தொழிலநுட்ப உலகில் ஒரு போட்டோவை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதும்கூட வியாபார முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது வரப்போகிற படத்தின் ட்ரைலர் பற்றி சமாச்சாரம். விடுவார்களா...? விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்திருக்கும்
புதிய படத்தின் டீஸரை அ‌‌ஜீத் 53 என்ற பெய‌ரில் (இது அ‌‌ஜீத்தின் 53வது படம் என்பதால் அப்படியொரு பெயர்) ஏப்ரல் 30 நள்ளிரவில் வெளியிட்டனர். 


மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த 42 விநாடிகள் ஓடக்கூடிய டீஸரை இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் எந்த தமிழ் டீஸருக்கும் இதுபோன்ற ஆதரவு இருந்ததில்லை. இந்திய அளவில் இந்த டீஸர்தான் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அ‌‌ஜீத் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பிறகும் இப்படியொரு வரவேற்பு. ஏம்பா ரசிகர்களே நீங்க எங்கதான் இருக்கீங்க...? 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget