அகில உலகம் போற்றும் ஆறாவது வாரம் என ’திருமதி தமிழ்’ படத்துக்கு விளம்பரம் கொடுத்த கையோடு அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்துவிட்டார் இயக்குனரும், ‘சோலார்’ ஸ்டாருமான இராஜகுமாரன்.
தற்போது இரண்டு படங்களுக்கான கதை, திரைக்கதை,வசனம் எழுதி ’ஃபைல்’ பண்ணி ரெடியாக உள்ள சூழ்நிலையில், வெகு விரைவில் படப் பிடிப்பை நடத்தவுள்ளார்.
முதலில் எடுக்க இருக்கும் படத்துக்கு ’உலக நாயகி’ என பெயர் வைத்திருக்கிறார். சாதாரணப் பெண் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு போராடி எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை. இரண்டாவதாக இயக்கும் படத்திற்கு ‘ராவனேஸ்வரி ஐ.பி.எஸ்.’ என பெயரிட்டிருக்கிறார்.
’இதுவும் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கும்’ என்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் இராஜகுமாரனேதான் கதாநாயகனாக ’லிப்ஸ்டிக்’ போடப் போகிறாரா..? என்று கேட்டால், ’அது சஸ்பென்ஸ் இப்போதைக்கு சொல்ல முடியாது’ என்கிறார்.