காதலனை மணாளனாக்கும் நடிகை மித்ரா குரியன்

பிரபல மலையாள நடிகை மித்ரா குரியன் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். மலையாளத்தில் குலுமால், பாடிகார்ட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், லேடீஸ் அண்ட ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் நடித்தர் மித்ரா. தமிழில் காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கரிகாலன், நந்தனம், கந்தா போன்ற படங்களிலும் நடித்தார். அவருக்கும் இசைத்துறை டெக்னீஷியன் வில்லியம் பிரான்சிஸ்
என்பவரும் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்த போது காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். இப்போது பிருத்விராஜ் ஜோடியாக லண்டன் பிரிட்ஜ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் மித்ரா. தமிழில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வாராம். சமீபத்தில் மித்ரா குரியன் பங்கேற்ற ஒரு டிவி ஷோவில் அவரை நேரடியாகக் குறைகூறி ரசிகர் ஒருவர் கடுமையாகப் பேசியது, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget