அசைவத்தை விரட்டிய அசைவ நாயகி வித்யாபாலன்


பாலிவுட் நடிகை வித்யாபாலன் அசைவ நடிகை என்று பெயரெடுத்து விட்டபோதும், அவருக்கு பல அசைவங்கள் பிடிக்காதாம். அதனால் எந்த விழாக்களுக்கு சென்றாலும் பெலும்பாலும் சைவ உணவுகளையே எடுத்துக்கொள்வாராம். அப்படியே யாராவது வற்புறுத்தினால் அவர்களுக்காக சிறிதளவு அசைவங்களை எடுத்துக்கொள்வாராம்.
இந்நிலையில், கடந்த 15-ந்தேதி முதல் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்று
வருகிறார் வித்யாபாலன். இதில் அவர் மட்டுமின்றி, ஐஸ்வர்யாராய், சோனம்கபூர், ஷெர்லின் சோப்ரா, மல்லிகா ஷெராவத் உள்பட பல பாலிவுட் நடிகர்-நடிகைகளும் பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் முக்கிய படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் வித்யாபாலனும் இருக்கிறார்.
இதனால் உலக நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டு வரும் அந்த விழாவில் முழு ஈடுபாட்டுடன் படங்களை பார்த்து வரும் வித்யாபாலன் உள்ளிட்ட குழுவுக்கு சமீபத்தில் ஒருநாள் அசைவ விருந்து கொடுக்கப்பட்டதாம். அப்போது வித்யாபாலனுக்கு தவளைக்கறி பரிமாறப்பட அதிர்ந்து விட்டாராம். அதைப்பார்த்து அவருக்கு வாந்தி வர, உடனே இந்த உணவை அப்புறப்படுத்தி விடுஙகள் என்று கூச்சலிட்டாராம். வித்யாபாலனின், இந்த சலசலப்பைக்கேட்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்து போனார்களாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget