இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டு மனித இனமே வாழத் தகுதியற்றதாகிவிடும் புவியை விட்டுவிட்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல மைல் தொலைவில் இருக்கும் நோவா ப்ரைம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழும் மனிதர்களுக்கு தொல்லை உர்ஸா எனப்படும் பிரிடேட்டர் வகை ஜந்துவால் ஏற்படுகிறது. இவர்களின் பாதுகாவலனாய் இருக்கும் சைபர் (வில் ஸ்மித்), அவரது மகன் கிட்டாய்
( ஜேடன் ஸ்மித்) மற்றும் சில வீரர்களுடன் ஒரு விண்கலத்தில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தில், பூமியில் விழும் இவர்களில் வீரர்கள் அனைவரும் இறந்துவிட, சைபரின் கால்களில் முறிவு ஏற்பட நோவாவிற்கு சிக்னல் அனுப்பும் கருவி பல மைல் தாண்டி விழுந்து விடுவதால் அதை எடுத்து இருவரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு கிட்டாயிடம் வருகிறது. எப்படி இருவரும் தப்பித்து நோவா கிரகத்திற்கு திரும்ப செல்கிறார்கள் என்பதே கதை..
இளையதளபதிக்கு அவரது தந்தை வரிசையாக படம் எடுத்து தூக்கிவிட்டது போல் தனது மகனைத் திரைத் துறையில் நிலைநிறுத்த வில்ஸ்மித் எடுத்திருக்கும் முயற்சி. தயாரிப்பாளரும் அவரே, கதாசிரியரும் அவரே.படத்தின் முடிவில் இயக்குனர் என்று நைட் சியாமளன் பெயர் வரும்போது தான் தெரிகிறது. (இயக்குனரின் டச் சுத்தமாக இல்லை என்பது சியாமளனின் முந்தைய படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரியும்.)
ஜேடன் ஸ்மித் இதற்கு முன் நடித்த "பர்சூட் ஆப் ஹேப்பினஸ்" மற்றும் "கராத்தே கிட்" படங்களில் கலக்கி இருந்தான். இந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் முந்தைய படங்களின் அளவுகோளின்படி இது கொஞ்சம் சுமார் ரகம் தான். சில இடங்களில் டைகருக்கு பிறந்தது டாங்கி ஆகாது என்பதை நிரூபிக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளிலெல்லாம் குட்டிப்புலி அட்டகாசமாய் ஸ்கோர் செய்கிறான்.
முதலில் சைபர் கேரக்டருக்கு டென்சல் வாஷிங்டன் நடிப்பதாக இருந்தது. பிறகு இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்கி (?!!) வில்ஸ்மித் நடித்ததாக கேள்வி. ஆனால் இவருக்கு இந்தப் படத்தில் ஹீரோயிசம் கொஞ்சம் குறைவு தான். மேலும் இவரின் சில காட்சிகள் நம்ம சூப்பர் ஸ்டார் முன்பே செய்துவிட்டதால் நமக்கு போரடிக்கிறது. உதாரணத்திற்கு இவர் அடிபட்ட காலை கிழித்து தானே முதலுதவி செய்வது மனிதன் படத்தில் நாம் பார்த்தது. ஜேடன் சிறுத்தையுடன் போடும் சண்டைகள் நாம் சிவாவில் பார்த்தது.
அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிசில் இந்தப் படம் தோல்வி என்றாலும் உலகளவில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய இப்போதைய பயமெல்லாம் இந்தப் படத்தை நம்மூர் இயக்குனர்கள் உருவி இளைய தளபதியை வைத்து எடுத்து விடுவார்களோ என்பது தான்..