உதட்டு முத்தம் காட்சியில் முதல் முறையாக நடித்த ஆருஷி

 அங்காடித்தெரு மகேஷ் நடித்து வரும் படம் அடித்தளம். இப்படத்தில் அழகன் அழகியில் நடித்த ஆருஷி நாயகியாக நடித்துள்ளார். கதைப்படி இதில் சித்தாள் பெண்ணாக நடித்திருக்கும் ஆருஷி, செங்கல், சிமெண்ட் சுமந்து ரொம்ப கஷ்டப்பட்டெல்லாம் நடித்திருக்கிறார். அப்படி நடித்தபோது ஒருமுறை சிதறி கிடந்த செங்கல்லில் இவர் மிதிக்க, அது உருண்டு இவரை கீழே தள்ளி விட்டதாம்.
அப்படி விழுந்ததில் குவிந்து கிடந்த செங்கல்லில் விழுந்த ஆருஷியின் கை மற்றும் கால் முட்டியில் அடிபட்டு ரத்தம் கசிந்ததாம். இதனால் வலியால் துடித்திருக்கிறார் ஆருஷி.

இருப்பினும் அன்றைய தினம் மகேசுடன் இணைந்து ஒரு காதல் காட்சியில் நடித்திருக்கிறார் ஆருஷி. அதில் இருவரும் உதட்டு முத்தம் கொடுத்துக்கொள்ளும் கிளுகிளுப்பான காட்சியாம். இனிப்பான காட்சி என்பதால், அதுவரை வலியால் துடித்துக்கொண்டிருந்தவர், அக்காட்சியில் நடித்தபோது வலி மறந்து போனாராம். சுமார் 2 மணி நேரம் நடந்த அந்த முத்தக்காட்சிக்குப்பிறகு ஆருஷியின் காலில் அடிபட்ட இடமே காய்ந்து விட்டதாம், வலியும் காணாமல் போய் விட்டதாம். அதனால், முத்தக்காட்சி என் வலிக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது என்று ஆருஷி வெட்கத்துடன் சொல்ல, யூனிட்டே கலகலப்பாகி விட்டதாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget