கணினி மோசடிகளும் கண்கட்டி வித்தையும்

1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. / ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை.
அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.

2. நான் நைஜீரியா நாட்டின் பெரிய பணக்காரர் மனைவி. என் கணவர் பல்லாயிரக் கணக்கான கோடி அமெரிக்க டாலர் பேங்கில் வைத்துவிட்டு இறந்துவிட்டார். இதனை எடுக்க யாராவது ஒருவரின் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் சம்மதித்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை மாற்றி, பின் எனக்குத் தாருங்கள். கமிஷனாக 10 % தருகிறேன் என்று இமெயில், போன் எண் எல்லாம் கொடுத்திருப்பார்கள். பதில் கடிதம் அனுப்பினாலோ, போன் செய்தாலோ, உங்கள் போன் எண்ணை முதலில் வாங்குவார்கள். இரக்கம் வரும் வகையில் பேசி, வங்கிக் கணக்கும் வாங்குவார்கள். பின் நாம் தான் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும். நம் வங்கிப் பணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு போய்விடுவார்கள். 

3. இணைய தளங்களில் ஏதேனும் படிவத்தில் சிறு சிறு கட்டங்களில் அடிக்கடி தகவல்களை நிரப்ப வேண்டியதிருக்கும். இந்த பாக்ஸுகளுக்குள் பயணம் செய்திட மவுஸை எடுத்து கர்சரைக் கொண்டு செல்லும் வேலையெல்லாம் வேண்டாம். ஜஸ்ட் டேப் கீயைத் தட்டவும். பின் நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் ஷிப்ட் கீயுடன் டேப் கீயைத் தட்டவும்.

4. ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறியதாக்க மைனஸ் கீயை இணைக்கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும். 

இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த பெரிதாகவும் பின்புறம் அழுத்த சிறிதாகவும் மாறும். மேக் கம்ப்யூட்டரில் இது முழு திரையையும் பெரிதாக்கும்.

5. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து விண்டோக்களையும் இரு கீகளை ஒரு சேர இணைத்து அழுத்தி மறைய வைக்கலாம்; மீண்டும் அதனைப் பெறவும் செய்திடலாம். அந்த கீகள் : விண்டோஸ் கீ + எம் கீ; மற்றும் விண்டோஸ் கீ+ டி (D) கீ.

6. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான். 

7. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம். அன்பான வாசகத்துடன், அழகான ஒரு காட்சிக்கான லிங்க் தரப்பட்டு, அதில் கிளிக் செய்தால், உங்களுக்கென உள்ள படம் இருப்பதாகக் குறிப்பு கிடைக்கும். நம்ம ப்ரண்ட் தானே என்று அலட்சியாமாக, படத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget