விண்டோஸ் 8 இயங்குதளம் முன்பதிவு செய்ய வேண்டுமா!


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை விரைவில் களம் இறக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த விண்டோஸ் 8ன் முழு டிவிடியை ப்ரி ஆர்டருக்காக விட்டிருக்கிறது. 70 அமெரிக்க டாலர்களை செலுத்தி இந்த விண்டோஸ் 8 முழு டிவிடியை வாங்க விண்ணப்பிக்கலாம். அதோடு அக்போடர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த விண்டோஸ் 8 இயங்கு தளம் வெளிவந்த பிறகு 40 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கணினி பயன்படுத்துவோர் தங்களது கணினிகளில் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி இறுதி வரை மட்டுமே உண்டு.

மேலும் இந்த சாப்ட்வேரை வாங்க சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், மைக்ரோசாப்டின் ஸ்டோர்களான அமேசான்.காம், பெஸ்ட்பை, ஸ்டேப்பிள்ஸ் போன்றவற்றில் முன்பதிவு செய்யலாம்.
அதுபோல் ஏற்கனவே விண்டோஸ் 7பிசியை வாங்கி இருப்பவர்கள் இந்த விண்டோஸ் 8ஐ 15 அமெரிக்க டாலர்களுக்கு அப்க்ரேட் செய்ய முடியும். தற்போது ஏசர், ஆசஸ்டெக், டெல், எச்பி, சாம்சங் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை தங்கள் புதிய கணினிகளில் இன்ஸ்டால் செய்ய ப்ரி ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget