கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள்

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சத்தான, மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக கர்ப்பிணிகளுக்கு 2500 லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது. 

கர்ப்ப காலம் முழுவதிலும் உப்பைக் கட்டுப்படுத்துவது ந்லலது. கர்ப்பிணிகளுக்கு அதிக
புரதம், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள கலப்பட உணவு உகந்தது. முடிந்தால் நாளொன்றுக்கு ஒரு லிட்டர் பாலினைக் கர்ப்பிணிகள் குடிப்பது நல்லது. 

பச்சைக் காய்களிகள் கூடுதல் இரும்புச்சத்தினைக் கொடுக்கும். பழங்களையும், காய்கறிகளையும் இவர்கள் எடுத்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும். இறைச்சி, மீன், முட்டைகள், ரொட்டி, சாதம், தயிர் போன்றவை இவர்களுக்கு நல்லது. 

கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் மார்பகங்களைக் கவனித்தல் மிகவும் முக்கியமாகும். மார்பகங்கள் பெரிதாகும். இந்த காலகட்டத்தில் இறுக்கமான, தேவையற்ற அழுத்தத்தை அளிக்கும் துணிகளை அணிய கூடாது. மார்பகங்கள் பெரியதாகவும், கனமானதாகவும் இருந்தால், அதனைத் தாங்குமாறு சரியான உள்ளாடைகளை அணிந்துகொள்ள வேண்டும். 

கர்ப்பத்தின் கடைசி கட்டத்தில் காம்புகளை சோப்பு மற்றும் தண்ணீரால் தினமும் கழுவி முன்னுக்கு இழுத்து விடவேண்டும். மலச்சிக்கலை கர்ப்பிணிகள் தவிர்த்தல் நல்லது.  நிறைய தண்ணீர் குடிப்பது, கீரைகளைச் சாப்பிடுவது, பழங்களைச் சாப்பிடுவது போன்றவற்றைச் செய்தாலேயே மலம் தினமும் முறையாக வந்துவிடும். 

அதோடு எளிமையான உடற்பயிற்சிகளும் செய்வது மலம் இயற்கையாக வெளிவர உதவும். கர்ப்ப காலத்தில் மன அமைதியுடன் இருத்தல் அவசியம். முடிந்த அளவுக்கு மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு மனதிற்கு இதமளிக்கும் புத்தகங்கள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல், தியானம் செய்தல், கைவினைப் பொருட்களைச் செய்தல் போன்றவை உதவியாய் இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget