மூன்று நம்பர் எழுத்து படத்தில் நடித்துள்ள மூன்றெழுத்து சிக்ஸ்பேக் நடிகர், சமீபத்தில்தான் விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக அறிவித்தார். அதையடுத்து அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்த அமெரிக்காவில் வாழும் மூன்றெழுத்து தமிழ் நடிகைதான் அவருக்கு தயாராகி வரும் மணப்பெண் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி நடிகை, செல்லம் நடிகர் தயாரித்த காஞ்சிவரம் என்ற படத்தில் அறிமுகமானவர், அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இதில் நம்முடைய மூன்றெழுத்து ஹீரோவுடன் இரண்டு படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் பத்திக்கொண்டதாம். அதன்பிறகு நடிகைக்கு சரியான படமில்லாமல் அமெரிக்கா சென்று விட்டபோதும், அவர்களுக்கிடையிலான காதல் அறுந்து போகவில்லையாம். கனெக்ஷனிலேயே இருந்து வருகிறார்களாம்.
இந்தநிலையில், தற்போது அந்த நடிகருக்கு திருமணம் என்றதும், அப்படின்னா மணப்பென் அந்த நடிகையாகத்தான் இருக்க வேண்டும். மேற்படி நடிகரின் நண்பர்கள் அந்த நடிகையை அண்ணி அண்ணி என்றுதான் முன்பு அழைத்து வந்தனர். அதனால் மேற்படி சிக்ஸ்பேக் நடிகரும் கூடிய சீக்கிரமே நடிகையுடனான காதலையும் சொல்லி கல்யாண தேதியையும் அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.