இந்தியப் பெண்களை மயக்கும் இணையதளம்

கூகுள் இந்தியா மற்றும் டி.என்.எஸ். ஆஸ்திரேலியா இணைந்து அண்மையில், பெண்களும் இணையமும் என்ற ஆய்வினை மேற் கொண்டது. இதில் இந்திய பெண்களின் வாழ்வு முறை இணையத்தினால் மாற்றப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. சருமம் மற்றும் தலைமுடி பாதுகாப்பு, அழகு சாதனங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவது ஆகியவற்றில், இந்திய பெண்கள், இணையம் தரும் முடிவுகளையே ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த ஆய்வு, இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்தும் ஆயிரம் பெண்களிடையேயும், இணையம் மூலமாக மற்றவர்களிடமும் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள 15 கோடி இணையப் பயனாளர்களில், 6 கோடி பேர் பெண்களாக உள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களில் பெரும்பாலானவர்கள், வசதி படைத்தவர்களாகவும், இளம் வயதுடையவர் களாகவும் உள்ளனர். 
பெண்கள் இணையத்தில் தேடும் பொருட்களில் ஆடைகள், அதனுடன் அணியும் துணைப் பொருட்கள் முதல் இடம் பெறுகின்றன. அடுத்ததாக உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள், குழந்தை வளர்ப்பு, கேசப் பாதுகாப்பு மற்றும் சரும பாதுகாப்பு குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. சரும பாதுகாப்பு விஷயத்தில் இணையம் தரும் தகவல்களே, அதிகமான (72%)பெண்களை மாற்றியுள்ளன. குழந்தைகள் சார்ந்த தகவல்கள் 69 சதவீதப் பெண்களை முடிவெடுக்கச் செய்துள்ளன. மொத்தத் தேடல்களில், பெண்கள் 25% தேடல்களைத் தங்கள் மொபைல் போன்களில் மேற்கொண்டதாக இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.
பெண்கள் பொருட்களை தேடி வாங்குவதில், இணையம் தங்களை அதிகம் பாதித்திருப்பதாகவும், அவர்களின் முடிவுகளை மாற்றியதா கவும் தெரிய வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இணையத்தால் முடிவெடுத்த பெண்கள், அவற்றை மற்ற பெண்களுக்கும் தெரிவித்து அவர்களையும் பின்பற்ற பரிந்துரை செய்வதுதான்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget