சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சிங்கம் 2 படம் மூன்று நாட்களில் ரூ 50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 பெரும் வெற்றி பெற்றுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சமீபத்தில் பிரஸ் மீட் வைத்து அறிவித்தனர்.
இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்களை தயாரிப்பாளர் தனது பிஆர்ஓ மூலம் அறிவித்துள்ளார். இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெரிய வசூலை சிங்கம் 2 அள்ளியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ 50 கோடியை வசூலித்துள்ளது. இந்த மூன்று நாட்களிலும் 100 சதவீத பார்வையாளர்கள் வந்ததாகவும், திங்கள், செவ்வாய் ஆகிய வார நாட்களிலும் 80 முதல் 90 சதவீத பார்வையாளர்கள் வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக முதலீடு தொகையை ஐந்தாவது நாளிலேயே எடுத்துவிட்டதாக படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான அருள்பதி தெரிவித்துள்ளார்.