நடிகர் : பிராட் பிட்
நடிகை : மிர்ரில்லி ஈனோஸ்
இயக்குனர் :மார்க் பாஸ்டர்
உலக நாடுகளை அச்சுறுத்தும் ஸோம்பிக்களின் தாக்குதல். அடக்கும் திறன் படைத்த நாயகனின் குடும்பமே நாசமாகும் பயங்கரம். குலை நடுங்க வைக்கும் ‘முப்பரிமாண’ த்ரில்லர்.
ஜெர்ரி லேனின் (பிராட் பிட்) வாழ்க்கை, சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. அவன், உலக நாடுகள் சபையின் ஓய்வுபெற்ற ஊழியன். அவனுடைய காதல் மனைவி கரின் லேன் (மிர்ரில்லி ஈனோஸ்) மற்றும் இரண்டு மகள்களுடனான வாழ்வில் குறுக்கிடுகிறது ஒரு கொடூரம். மரணமற்ற ஸோம்பிக்கள் (பிரேத மனிதர்கள்) நியூயார்க்கை முற்றுகையிட்டு விட்டார்கள். அவர்களால் கடிபட்ட எவரும் ஸோம்பிக்களாக மாறு்ம் அபாயம்! கரின் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றி, அமெரிக்க ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறான் ஜெர்ரி. ‘‘திரும்பி வந்தால் சேர்ந்து வாழ்வோம்’’ என்கிற கடைசி வார்த்தைகளுடன், வேட்டைக்கு புறப்படுகிறான். தென்கொரியா, இஸ்ரேல் என பல நாடுகளுக்கு பயணித்ததில், வேல்ஸில் இருக்கும் சோதனைச்சாலையில், ஸோம்பிக்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் மருந்து இருப்பதை கண்டறிகிறான். ஆனால், அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அறையில் வேலை பார்த்த 18 விஞ்ஞானிகளும், ஸோம்பிக்களாக மாறி அங்கேயே இருக்கிறார்கள். ஜெர்ரி மருந்தை கைப்பற்றினானா? அல்லது மரணத்தை தழுவினானா? என்பது 115 நிமிட திக் திக்.
இதயத்தை சுக்கு நூறாக உடைக்கக்கூடிய முப்பரிமாண காட்சிகள். கடிபட்ட மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறி, கோர முகங்களுடன் நம் முன் சீட்டுக்கு வரும்போது, இதயம் கொஞ்சம் நின்று துடிக்கிறது. ஒளி இயக்குனர் பென் செரேசின், பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இஸ்ரேலின் 100 அடி உயர சுற்றுச்சுவர் மீது, ஸோம்பிக்கள் மனித மலை போல் ஏற முயற்சிப்பதும், உயரம் தாண்டிய பலர்... தெருக்களில் ஆவேசமாக ஓடி வருவதும், ஒரு பருந்துப் பார்வையில் காட்டப்படும்போது... நெஞ்சம் சிலிர்க்கிறது. திகிலுக்கு பஞ்சம் வைக்காமல் இசையமைத்திருக்கிறார் மார்க்கோ பெல்டிராமி. நம்மை துளிகூட அசையவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் பாஸ்டர்.
அதிகம் அலட்டவில்லை. ஆனாலும், ‘இவன் ஜெயிக்க வேண்டும்’ என்கிற உணர்வை நமக்கு ஊட்டுகிறார் பிராட் பிட்.
ரசிகன் குரல்: மாப்ளே... பேண்ட்ல ‘உச்சா’ போயிட்டேன்னு நினைக்கிறேன்!
மொத்தத்தில் பிரம்மாண்ட பயம்