எச்.டி.சி. 10 ஸ்மார்ட்போன்

எச்.டி.சி. நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட் போன் எச்.டி.சி.10. பண்டிகை காலத்தில் இதனை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,
இந்நிறுவனம், இதன் விலையைக் குறைத்து அதன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இது எந்த நாள் வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடவில்லை.

எச்.டி.சி. 10 ஸ்மார்ட் போன் சென்ற மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன்
அதிக பட்ச விலை ரூ. 52,990. தற்போது இதனை ரூ. 47,990 செலுத்தி வாங்க முடியும். விலை குறைக்கப்பட்டதனால், சாம்சங் காலக்ஸி எஸ் 7, எல்.ஜி. ஜி5 மற்றும் ஐபோன் 7 வாங்க விரும்புபவர்கள், இதனையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதனை முடிவு செய்திடலாம்.

எச்.டி.சி. நிறுவன ஸ்மார்ட் போன்களில், முதல் முதலாக புதிய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 'நகட்' மேம்படுத்தப்படும் வகையில், முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன் இதுதான். மற்ற போன்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்துதல் வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படலாம்.

எச்.டி.சி.10 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்: 5.2 அங்குல அளவில் 2560 x 1440 பிக்ஸெல் அடர்த்தியுடன், அருமையான எல்.சி.டி. திரை, புதிய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 'நகட்' பெறத் தயாராக ஆண்ட்ராய்ட் பதிப்பு 6, ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. (2 டி.பி. வரை உயர்த்தும் வசதியுடன்), ராம் மெமரி 4 ஜி.பி., ஸ்நாட் ட்ராகன் 820 ப்ராசசர், 3000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் பரிமாணம் 145.9 x 71.9 x 3.0 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கென இந்த போன் பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் ~ 4G, Wi-Fiac, Bluetooth, microUSB 2.0, GPS, GLONASS, NFC ஆகியவை ஆகும். எச்.டி.சி. நிறுவனம், அதிகார பூர்வ விலை குறைப்பாக ரூ.5,000 மட்டுமே குறைத்தாலும், பல இணைய வர்த்தக இணைய தளங்கள், இன்னும் குறைவான விலையில், இந்த ஸ்மார்ட் போனை வழங்குகின்றனர். ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப இதன் விலை இணைய தளங்களில் நிர்ணயிக்கப்படுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget